"சிக்கன் சாண்விட்ச்"ல் காட்டும் அக்கறை , பிரச்சினைகளில் இல்லை...! - காங்கிரசை சாடும் ஹர்திக் படேல்
ஹர்திக் படேல் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவா் சோனியா காந்திக்கு அளித்துள்ளதாக தொிவித்துள்ளாா்.
அகமதாபாத்
2015-ம் ஆண்டு குஜராத்தில் சக்திவாய்ந்த பட்டிதார் சமூக இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ஹர்திக் படேல், 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸில் சேர்ந்தார்.
அவர் குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவராகவும் இருந்தாா். கட்சியில் உள்ளவர்களால் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து கூறி வந்த ஹர்திக் படேல் திடீரென பாஜகவை புகழ்ந்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பா.ஜ.க.வைப் பற்றி சில நல்ல விஷயங்கள் உள்ளன, அதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்த கருத்து காங்கிரசிற்குள் புயலை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அரவிந்த கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியில் இணைய போவதாகவும் தகவல்கள் வந்தன.
குஜராத் கட்சித் தலைமை தன்னை ஓரங்கட்டுவதாகவும், தன்னை வெளியேற்ற முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினாா். சமீபத்தில் அவர், தன் பெயருடன் இருந்த ‘காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்’ என்ற தலைப்பை டுவிட்டரில் இருந்து நீக்கி இருந்தாா்.
இந்த நிலையில், ஹர்திக் படேல் விரைவில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக டுவிட்டாில் தொிவித்துள்ளாா். தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவா் சோனியா காந்திக்கு அளித்துள்ளதாக தொிவித்துள்ளாா்.
இது குறித்து ஹர்திக் படேல் கூறி இருப்பதாவது:-
குஜராத்தில் உள்ள காங்கிரசின் பெரிய தலைவர்கள் மாநில பிரச்சினைகளில் இருந்து வெகு தொலைவில் உள்ளனர், ஆனால் டெல்லியில் இருந்து வந்துள்ள தலைவர்களுக்கு சிக்கன் சாண்ட்விச் வழங்குவதை உறுதி செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். சரியான நேரத்தில் அது டெலிவரி செய்யப்படுகிறது.
காங்கிரசை சரியான திசையில் வழிநடத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், "அக்கட்சி தொடர்ந்து நாடு மற்றும் சமூகத்தின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது
"நான் மூத்த தலைவர்களை சந்திக்கும் போதெல்லாம், தலைவர்கள் குஜராத் மக்கள் தொடர்பான பிரச்சனைகளைப் பற்றி கேட்பதில் உண்மையில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் அவர்கள் தங்கள் மொபைலில் என்ன செய்திகளைப் பெற்றார்கள் என்பதில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதை நான் எப்போதும் உணர்ந்தேன்... என கூறி உள்ளார்.
கடிதத்தின் முடிவில் "...இந்த நடவடிக்கைக்குப் பிறகு, நான் உண்மையிலேயே எங்கள் மாநில மக்களுக்கு சாதகமாக பணியாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன்".
आज मैं हिम्मत करके कांग्रेस पार्टी के पद और पार्टी की प्राथमिक सदस्यता से इस्तीफा देता हूँ। मुझे विश्वास है कि मेरे इस निर्णय का स्वागत मेरा हर साथी और गुजरात की जनता करेगी। मैं मानता हूं कि मेरे इस कदम के बाद मैं भविष्य में गुजरात के लिए सच में सकारात्मक रूप से कार्य कर पाऊँगा। pic.twitter.com/MG32gjrMiY
— Hardik Patel (@HardikPatel_) May 18, 2022
Related Tags :
Next Story