இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு புதிய தலைமை செயல் அதிகாரி நியமனம்!


இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு புதிய தலைமை செயல் அதிகாரி நியமனம்!
x
தினத்தந்தி 18 May 2022 2:24 PM GMT (Updated: 18 May 2022 2:24 PM GMT)

இண்டிகோ ஏர்லைன்ஸ் அதன் புதிய தலைமை செயல் அதிகாரியாக பீட்டர் எல்பர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.

புதுடெல்லி,

இன்டர்குளோப் ஏவியேஷன் - இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பீட்டர் எல்பர்ஸை நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனம், குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமாக விளங்கும் இண்டிகோவின் தாய் நிறுவனமாகும். இன்டர்குளோப் ஏவியேஷன் அதன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பீட்டர் எல்பர்ஸை நியமித்தது.

இப்போது தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வரும் ரோனோஜாய் தத்தா விரைவில்  ஓய்வு பெற உள்ள நிலையில், பீட்டர் எல்பர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

52 வயதான எல்பர்ஸ் அக்டோபர் 1, 2022 முதல் இந்நிறுவனத்துடன் இணைவார்.அவர் 2014 முதல், கே எல் எம் ராயல் டச்சு ஏர்லைன்ஸின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியவர். இவர் ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். செப்டம்பர் 30, 2022 அன்று முதல்,  ஓய்வு பெற முடிவு செய்த 71 வயதான ரோனோஜாய் தத்தாவுக்குப் பிறகு அவர் பதவியேற்பார்.

இது குறித்து இண்டிகோவின் நிர்வாக இயக்குநர் ராகுல் பாட்டியா கூறியதாவது, “ஏறக்குறைய நான்கு ஆண்டுகளாக எங்கள் வணிகத்தை திறம்பட வழிநடத்தியதற்காக இயக்குநர்கள் குழுவும் நானும் ரோனோஜாய் தத்தாவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்” என்று  தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில், விமான சேவைகள் முடக்கப்பட்ட போது. இண்டிகோ நிறுவனத்தை ரோனோஜாய் தத்தா திறம்பட கையாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story