கேரளாவில் விபத்துக்குள்ளான படகின் உரிமையாளர் தலைமறைவு


கேரளாவில் விபத்துக்குள்ளான படகின் உரிமையாளர் தலைமறைவு
x

படகு உரிமையாளர் மீன்பிடி படகை சுற்றுலா சேவைக்காக மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரளாவை உலுக்கிய இந்த விபத்துக்கு அதிகப்படியான பயணிகளை ஏற்றி சென்றதே காரணம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 20 பேர் செல்லக்கூடிய படகில் 40 பயணிகள் பயணித்துள்ளனர்.

இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தனூரைச் சேர்ந்த படகு உரிமையாளர் நாசர் என்பவர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே, படகின் உரிமையாளர் தலைமறைவு ஆகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

படகு உரிமையாளர் மீன்பிடி படகை சுற்றுலா சேவைக்காக மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுற்றுலாப் படகுகளுக்கு வழங்கப்படும் தகுதிச் சான்றிதழ் இல்லாமல் படகு இயக்கப்பட்டதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். படகு உரிமையாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story