தென்கிழக்கு பகுதியில் 24 ரெயில்கள் இன்று ரத்து.!


தென்கிழக்கு பகுதியில் 24 ரெயில்கள் இன்று ரத்து.!
x

ஒடிசாவில் ரெயில்கள் விபத்துக்குள்ளான பகுதியில் மொத்த இண்டர் லாக்கிங் அமைப்பும் மாற்றப்படுவதாக ரெயில்வே விளக்கமளித்துள்ளது.

சென்னை,

நாட்டை உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்து நடைபெற்ற பகுதியில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பஹநாக பஜார் ரெயில் நிலையத்தில் பராபரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக பல ரெயில் சேவைகள் ரத்துசெய்யப்பட்டு உள்ளன.

அதன்படி, தென்கிழக்கு ரெயில்வே பிராந்தியத்தில் இன்று மொத்தம் 24 விரைவு ரெயில்கள் ரத்துசெய்யப்படுகிறது என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. ரெயில்கள் விபத்துக்குள்ளான பகுதியில் மொத்த இண்டர் லாக்கிங் அமைப்பும் மாற்றப்படுவதாக ரெயில்வே விளக்கமளித்துள்ளது.

இண்டர் லாக்கிங் மின்னணு அமைப்புல் ஏற்பட்ட மாற்றத்தால் விபத்து நேர்ந்ததாக கூறப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது. ரெயில் விபத்தை சிபிஐ விசாரிக்கும் நிலையில், பஹநாக ரெயில் நிலையத்திற்கு நேற்று சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story