கர்நாடகத்தில் புதிதாக 288 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 288 பேருக்கு கொரோனா
x

கர்நாடகத்தில் புதிதாக 288 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பெங்களூரு:-

வைரஸ் தொற்று

கர்நாடகத்தில் நேற்று 10 ஆயிரத்து 701 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 288 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 143 பேருக்கும், பல்லாரியில் 18 பேருக்கும், சிக்கமகளூருவில் 13 பேருக்கும், சிவமொக்காவில் 46 பேருக்கும், மைசூருவில்

11 பேருக்கும், பெங்களூரு புறநகரில் 5 பேருக்கும், கலபுரகியில் 9 பேருக்கும், கோலாரில் 6 பேருக்கும், சித்ரதுர்காவில் 4 பேருக்கும், தாவணகெரேயில் 3 பேருக்கும் பாதிப்பு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் மருத்துவ சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை ஆயிரத்து 37 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 2.23 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 158 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தனர். கர்நாடகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 300-ஐ நெருங்கியுள்ளது. சட்டசபை தேர்தல் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது சுகாதாரத்துறைக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்

அடுத்து வரும் நாட்களில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கும். இந்த நேரத்தில் மக்கள் அதிகளவில் ஒரு இடத்தில் கூடினால், அதன் மூலம் கொரோன பரவல் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்தால், சுகாதாரத்துறை புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story