இரியூரில் வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது


இரியூரில்  வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 Sep 2023 6:45 PM GMT (Updated: 13 Sep 2023 6:47 PM GMT)

இரியூரில் வாலிபர் கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கொடுக்கல்-வாங்கல் பிரச்சினையில் தீர்த்து கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சித்ரதுர்கா-

இரியூரில் வாலிபர் கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கொடுக்கல்-வாங்கல் பிரச்சினையில் தீர்த்து கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சாலை விபத்து

சித்ரதுர்கா மாவட்டம் இ்ரியூர் தாலுகாவில் சன்னம்மனஹள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே கடந்த மாதம் தேசிய நெடுஞ்சாலையோரம் 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஐமங்களா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இரியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், அந்த நபர் சன்னம்மனஹள்ளி கிராமத்தை சேர்ந்த நாகேந்திரன் (வயது35) என்பதும், அவரை மர்மநபர்கள் அடித்து கொலை செய்து விட்டு சாலையோரம் வீசிவிட்டு சென்றதும் தெரியவந்தது. இதற்கிடையே நாகேந்திரன் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஐமங்களா போலீசில் புகார் அளித்தனர்.

உறவினர்கள் போராட்டம்

மேலும் கொலை செய்தவர்களை பிடிக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்தநிலையில் மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில், காரில் வந்த நபர்கள் நாகேந்திரனை சாலையோரம் வீசிவிட்டு செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில், யாதகிரி மாவட்டத்தை சேர்ந்த ராஜு, சரணப்பா, யாதகரியப்பா ஆகிய 3 பேரை ஐமங்களா போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், பணம் கொடுக்கல்- வாங்கல் தொடர்பாக நாகேந்திரனை அவர்கள் 3 பேரும் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து ராஜு, சரணப்பா, யாதகரியப்பா ஆகிய 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story