தமிழக வாலிபர் கொலையில் நண்பர்கள் 3 பேர் கைது


தமிழக வாலிபர் கொலையில் நண்பர்கள் 3 பேர் கைது
x

பெங்களூருவில் தமிழக வாலிபர் கொலையில் நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூரு பனசங்கரி அருகே கதிரேனஹள்ளியில் வசித்தவர் பிரசாந்த் (வயது 30), தமிழகத்தை சேர்ந்த இவர், சிட்டி மார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வந்தார். கடந்த மாதம் (ஜூலை) 27-ந் தேதி குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பிரசாந்தை, அவரது நண்பா்கள் கொலை செய்திருந்தனர். இதுகுறித்து சிட்டி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த வசந்த்குமார் (25), சரண்ராஜ் (26), முகுந்தன் (25) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில் தலைமறைவாக இருந்த 3 பேரும் போலீசாரிடம் சிக்கி இருந்தனர். இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.


Next Story