மராட்டியம்: சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது மோதிய கார் - 3 பேர் பலி


மராட்டியம்: சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது மோதிய கார் - 3 பேர் பலி
x
தினத்தந்தி 10 Nov 2023 9:00 AM IST (Updated: 10 Nov 2023 9:01 AM IST)
t-max-icont-min-icon

விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள ஊர்லி நகரில் இருந்து பாந்திரா நோக்கி நேற்று இரவு கார் சென்றுகொண்டிருந்தது. பாந்திரா-ஊர்லி சி லிங்க் சாலையில் உள்ள சுங்கச்சாவடிக்கு அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருந்த கார்கள் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story