உ.பி: மின்னல் தாக்கி 3 பேர் பலி


உ.பி: மின்னல் தாக்கி 3 பேர் பலி
x

உத்தரபிரதேசத்தில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தின் சிதாபூர் மாவட்டம் சீம்ரா நக்ரூல் கிராமத்தை சேர்ந்த சம்பத் (வயது 32) மற்றும் அவரது தேவி (30) நேற்று வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்தது.

அப்போது, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. திடீரென வயலில் வேலை செய்துகொண்டிருந்த சம்பத், தேவி மீது மின்னல் பாய்ந்தது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதேபோல், கீவழ்பூர்வா கிராமத்தை சேர்ந்த சஞ்சய் (35) அவரது மகளும் கனமழை காரணமாக ஒரு மரத்தின் அடியில் நின்றுகொண்டிருந்தனர்.

அப்போது, அந்த மரம் மீது மின்னல் தாக்கியதில் சஞ்சய் மீது மின்னல் பாய்ந்தது. இதில், சஞ்சய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகள் படுகாயமடைந்தனர்.

அதேபோல், அப்பகுதியில் மின்னல் தாக்கி 12 வயது சிறுவன் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story