சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்து 3 பேர் பலி


சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்து 3 பேர் பலி
x

பாய்லர் வெடித்ததில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டம் ஜவகர்பூர் பகுதியில் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் நேற்று பணியாளர்கள் வழக்கம்போல் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, ஆலையில் உள்ள பாய்லர் திடீரென வெடித்தது. இந்த வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story