சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் 3 பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு


சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் 3 பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு
x

சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் 3 பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

பெங்களூரு: பெங்களூரு ஜெயநகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சங்கிலி பறிப்பு வழக்கில் தொடர்புடைய 3 வாலிபர்களை கைது செய்தனர். இவர்கள் 3 பேர் மீதும் பல்வேறு சங்கிலி பறிப்பு கொள்ளை வழக்குகள் இருக்கிறது. கைதான 3 பேருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் அவர்களுக்கு எச்.ஐ.வி. (எய்ட்ஸ்) பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.இவர்கள் 3 பேரும் ஏராளமான பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. அதாவது, கொள்ளையடிக்கும் தங்க நகைகளை விற்று அதில் கிடைக்கும் பணத்தின் மூலம் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.


இதன்மூலம் அவர்களுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. அதேநேரத்தில் தங்களுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரிந்திருந்தும் பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்ததும் தெரியவந்துள்ளது.


Next Story