குஜராத் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானிய மீனவர்கள் 3 பேர் கைது


குஜராத் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானிய மீனவர்கள் 3 பேர் கைது
x

குஜராத் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானிய மீனவர்கள் 3 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.


கட்ச்,


பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள், போதை பொருட்கள் உள்ளிட்டவை இந்தியாவுக்குள் சட்டவிரோத வகையில் கடத்தப்படுவது கண்டறியப்பட்டு, தடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் பஞ்சாப், குஜராத் வழியே இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

இந்த நிலையில், குஜராத் கடல் பகுதியில் பாகிஸ்தானிய மீனவர்கள் அத்துமீறி நுழைவதும் அவ்வப்போது நடக்கிறது. இந்த நிலையில், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் ஹராமி நல்லா என்ற பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அந்த பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானிய மீனவர்கள் 3 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்தது. இதனை ஊடகங்களிடம் இன்று தெரிவித்து உள்ளது.

அவர்களிடம் இருந்து படகும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்தியாவுக்குள் நுழைந்ததற்கான காரணம் பற்றி அவர்களிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.


Next Story