அயோத்தியில் நடத்திய சோதனையில் 3 பேர் கைது - பயங்கரவாத எதிர்ப்பு படையினர் நடவடிக்கை


அயோத்தியில் நடத்திய சோதனையில் 3 பேர் கைது - பயங்கரவாத எதிர்ப்பு படையினர் நடவடிக்கை
x

ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா வரும் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனை முன்னிட்டு அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அயோத்தி நகரில் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் நடத்திய சோதனையில், சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Next Story