மும்பை அருகே மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதி 3 வாலிபர்கள் உயிரிழப்பு


மும்பை அருகே மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதி 3 வாலிபர்கள் உயிரிழப்பு
x

மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட 3 பேரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தனர்.

மும்பை,

மும்பையை அடுத்த பால்கர் மாவட்டம் விக்ரம்காட் பகுதியை சேர்ந்தவர் சூரஜ் தாக்கரே(வயது20). இவரது நண்பர் நரேஷ் போயிர்(22). உறவினர் மயூர் தாக்கரே(19). இவர்கள் 3 பேரும் நேற்று ஒரே மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றனர். மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலை சாத்திவிலி அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட 3 பேரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தனர். விபத்து நடந்த உடன் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மனோர் போலீசார் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் 3 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, தப்பிஓடிய லாரி டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story