திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட் இன்று வெளீயிடு..!


திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட் இன்று வெளீயிடு..!
x

திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட் இன்று காலை ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் ரூ.300 தரிசன கட்டண டிக்கெட்டுகள் மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அதன்படி மே மற்றும் ஜூன் மாதத்திற்கான ரூ.300 தரிசனம் டிக்கெட்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆன்லைனில் காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

இதனை பக்தர்கள் https://tirupathibalaji.ap.gov.in என்ற இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் TTDevasthanams என்ற தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியிலும் டிக்கெட் பதிவு செய்துகொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மேலும் திருமலையில் மே மாதம் பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் முன்பதிவு நாளை (26-ம் தேதி) காலை 10 மணிக்கும், திருப்பதியில் உள்ள அறைகள் ஏப்.27-ம்தேதி காலை 10 மணிக்கும் வெளியிடப்பட உள்ளது. எனவே, பக்தர்கள் தங்களுக்கு தேவையான டிக்கெட் மற்றும் அறைகளை முன் பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


Next Story