காஷ்மீரில் 300 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் - மூத்த ராணுவ அதிகாரி தகவல்
காஷ்மீரில் 300 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஜம்மு,
1948-ம் ஆண்டு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க இந்திய ராணுவம் 'ஆபரேஷன் ஈசி' என்கிற பெயரில் தாக்குதல் நடத்தியதன் 75-வது ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி தலைமையில் பூஞ்ச் மாவட்ட மக்கள் மற்றும் ராணுவத்தினர் இதை உற்சாகமாக கொண்டாடினர். அதை தொடர்ந்து உபேந்திர திவேதி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜம்மு-காஷ்மீரில் சுமார் 300 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர், ஆனால் அவர்களால் எந்த தாக்குதலையும் நடத்த முடியாது என்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமை ஒரு பெரிய மாற்றத்துக்கு உட்பட்டுள்ளது. அமைதி மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்தவும், பயங்கரவாதத்தை ஒடுக்குவதை உறுதிசெய்யவும் யூனியன் பிரதேச நிர்வாகம் சிறந்த வேலையை செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.