2022-ல் விமான நிறுவனங்கள், தனி நபர்கள் மீது 305 அமலாக்க நடவடிக்கைகள் - டி.ஜி.சி.ஏ. தகவல்


2022-ல் விமான நிறுவனங்கள், தனி நபர்கள் மீது 305 அமலாக்க நடவடிக்கைகள் - டி.ஜி.சி.ஏ. தகவல்
x

Image Courtesy : ANI

விமான நிறுவனங்கள், தனி நபர்கள் உள்ளிட்டோர் மீது மொத்தம் 305 அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம்(டி.ஜி.சி.ஏ.) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2022-ம் ஆண்டு விதிகளை மீறி செயல்பட்டது தொடர்பாக விமான நிறுவனங்கள், தனி நபர்கள் உள்ளிட்டோர் மீது மொத்தம் 305 அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியது, விமான போக்குவரத்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதது உள்ளிட்ட விவகாரங்களில் விமான நிறுவனங்கள், விமான நிலைய செயல்பாட்டாளர்கள், விமான பயிற்சி நிறுவனங்கள் ஆகியோர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதே போல் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத விமானிகள், விமான ஊழியர்கள், கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உள்ளிட்ட தனி நபர்கள் மீதும் அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே போல் 2022-ம் ஆண்டில் 39 வழக்குகளில் விமான நிறுவனங்கள், விமான நிலைய செயல்பாட்டாளார்கள் ஆகியோர் மீது ரூ.1.975 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story