அக்னிபத் குறித்து தவறான தகவல் பரப்பிய 35 வாட்ஸ்அப் குழுக்களுக்கு தடை மத்திய அரசு நடவடிக்கை
புதுடெல்லி,
மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக போராட்டங்களும், வன்முறையும் அரங்கேறி வருகிறது. இந்த போராட்டம் மற்றும் வன்முறைக்கு பின்னணியில் இருப்பது யார்? என்பது குறித்து விசாரணை அமைப்புகள் ஆய்வு செய்து வருகின்றன.
இந்த நிலையில் அக்னிபத் திட்டம் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரப்பிய சமூக ஊடக கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 35 வாட்ஸ்அப் குழுக்கள் கண்டறியப்பட்டு, அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது.
எனினும் இந்த வாட்ஸ்அப் குழுக்கள் பற்றிய விவரங்களோ அல்லது அவற்றின் அட்மின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்த தகவல்களோ எதுவும் வெளியிடப்படவில்லை.
Related Tags :
Next Story