Normal
பஞ்சாப் மாநிலத்தில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்
பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சங்ரூர்,
பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மாலை 3.56 மணிக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கமானது சங்கூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது
முன்னதாக நேற்று காலை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள திக்லிபூரிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story