நாடு முழுவதும் 39 பள்ளிக்கூடங்களுக்கு தூய்மை விருது: மத்திய அரசு வழங்கியது


நாடு முழுவதும் 39 பள்ளிக்கூடங்களுக்கு தூய்மை விருது: மத்திய அரசு வழங்கியது
x

நாடு முழுவதும் 39 பள்ளிக்கூடங்களுக்கு தூய்மை விருதினை மத்திய அரசு வழங்கியது

புதுடெல்லி,

பள்ளி வளாகத்தில் தூய்மையை கடைப்பிடிக்கும் பள்ளிக்கூடங்கள் ஆண்டுதோறும் மத்திய அரசு 'தூய்மை வித்யாலயா புரஸ்கார்' என்ற பெயரில் விருது வழங்கி வருகிறது.

இந்த விருதுக்காக குடிநீர், கழிவறை, சோப்புடன் கை கழுவும் வசதி, செயல்பாடு மற்றும் பராமரிப்பு, நடத்தை மாற்றம் மற்றும் திறன், கொரோனா (தயார்நிலை மற்றும் எதிர்கொள்ளல்) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் பள்ளிக்கூடங்கள் மதிப்பிடப்படுகின்றன. இந்த துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 39 பள்ளிக்கூடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 2021-22-ம் கல்வியாண்டுக்கான தூய்மை விருது நேற்று வழங்கப்பட்டன. இதில் 28 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களும், 11 தனியார் பள்ளிக்கூடங்களும் அடங்கியுள்ளன.

இந்த விருதுக்காக விண்ணப்பிக்கப்பட்ட 8.23 பள்ளிக்கூடங்களில் இருந்து இந்த 39 பள்ளிக்கூடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் 2 கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாக்கள், ஒரு நவோதயா பள்ளிக்கூடங்கள், 3 கேந்திரிய வித்யாலயாக்களும் அடங்கும்.

இந்த விருதுடன் ரூ.60 ஆயிரம் (ஒட்டுமொத்த பிரிவு) மற்றும் ரூ.20 ஆயிரம் (துணைப்பிரிவுகள்) பணப்பரிசும் வழங்கப்பட்டதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


Next Story