பிறந்தநாள் கொண்டாடியபோது வாளால் கேக் வெட்டிய 4 பேர் கைது


பிறந்தநாள் கொண்டாடியபோது வாளால் கேக் வெட்டிய 4 பேர் கைது
x

பிறந்தநாள் கொண்டாடியபோது வாளால் கேக் வெட்டியது தொடர்பான வீடியோ வைரலானது. அதுதொடர்பாக போலீசார் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மங்களூரு;

பிறந்தநாள் கொண்டாட்டம்

உடுப்பி மாவட்டம் படுபித்திரி பகுதியை சேர்ந்தவர் ஜிதேந்திர ஷெட்டி. இவருக்கு கடந்த (மே) மாதம் 30-ந் தேதி பிறந்தநாள் ஆகும். தனது பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாட முடிவு செய்தார். அதற்காக அவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த கணேஷ் பூஜாரி, சரத் ஷெட்டி, மற்றும் புட்டா ஆகியோரை வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கேக்கை வாளால் வெட்டி கொண்டாடி உள்ளார்.

மேலும், இதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இந்த நிலையில் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதை கண்ட உடுப்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுவர்தன் சம்பவம் குறித்து விசாரணை நடத்த படுபித்திரி போலீசாருக்கு உத்தரவிட்டார்.


வழக்கு பதிவு


இந்த நிலையில் வீடியோ தொடர்பாக வழக்குப்பதிவு செய்த படுபித்ரி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், வாளால் கேக் வெட்டியதாக கூறி அதே பகுதியை சேர்ந்த ஜிதேந்திர ஷெட்டி, கணேஷ் பூஜாரி, சரத் ஷெட்டி, மற்றும் புட்டா ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் ஜிதேந்திர ஷெட்டி தனது பிறந்தநாளில் வாளால் கேக் வெட்டி கொண்டாடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story