டெல்லி: தொழிலதிபரிடம் ரூ. 70 லட்சம் மோசடி செய்த 4 பேர் கைது


டெல்லி: தொழிலதிபரிடம் ரூ. 70 லட்சம் மோசடி செய்த 4 பேர் கைது
x

டெல்லியில் தொழிலதிபரிடம் ரூ. 70 லட்சம் மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுடெல்லி,

மத்திய டெல்லியின் தர்யாகஞ்ச் பகுதியில் கணிணி உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர் சுதிர் விக். இவர், தனது அலுவலகத்தில் பணியாற்றும் வருண் வர்மா மற்றும் மோன்டுவிடம் நிகழ்நேர மொத்த செட்டில்மென்ட் (ஆர்டிஜிஎஸ்) மூலம் தனது கணக்கில் ரூ. 70 லட்சத்தை மாற்றுமாறு கூறி அனுப்பியுள்ளார்.

ஆனால், இந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முடிவு செய்த அவர்கள், சுதிர்விக்கிடம், ரூ.70 லட்சம் மாற்றப்பட்டுவிட்டதாக போலி ரசீதை காட்டி அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

பின்னர், சண்தேகமடைந்த சுதிர்விக், போலீசிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருண் வர்மா, மோண்டு மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அமித் வர்மா மற்றும் வருண் கட்டியல் ஆகியோரை கைதுசெய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பணம் தொழிலதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story