ஜார்கண்டில் பஸ் கவிழ்ந்து விபத்து- 4 பேர் உயிரிழப்பு


ஜார்கண்டில் பஸ் கவிழ்ந்து விபத்து- 4 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 2 Oct 2022 2:19 PM IST (Updated: 2 Oct 2022 2:41 PM IST)
t-max-icont-min-icon

ஜார்கண்டில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.

ஹசாரிபாக்,

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்தனர்.

பீகார் மாநிலம் கயாவிலிருந்து பஸ் ஒன்று ஹசாரிபாக் வழியாக ஒடிசா சென்றுகொண்டிருந்தது. இந்த பஸ்சில் பெரும்பாலும் யாத்ரீகர்கள் பயணம் செய்தனர். பாகுமர் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது ஒரு வளைவில் திரும்பும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஹசாரிபாக் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


Next Story