4 மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை: ஆயுதங்கள் மீட்பு
4 மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் பொம்ரா என்ற கிராமத்துக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் சுமார் 40 பேர் தங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதையடுத்து மாவட்ட ரிசர்வ் காவல் படை, சிறப்பு அதிரடி படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அடங்கிய கூட்டு பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.நேற்று காலை 7.30 மணியளவில் நடைபெற்ற இந்த தேடுதலின்போது அவர்களை நோக்கி மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது.சண்டை முடிந்தபின் அங்கு 2 பெண்கள் உள்பட 4 மாவோயிஸ்டு பயங்கரவாதிகளின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 3 ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்டு பயங்கரவாதிகளின் அடையாளம் இதுவரை தெரியவில்லை என்றும், தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பஸ்தார் பிராந்திய போலீஸ் ஐ.ஜி. சுந்தர்ராஜ் தெரிவித்தார்.