பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் எம்.எல்.ஏ. மகன்கள்


பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் எம்.எல்.ஏ. மகன்கள்
x

பல்கலைகழகத்தில் சீட் கேட்டு வந்த பெண்ணை முன்னாள் எம்.எல்.ஏ. வின் மகன்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. ஹாஜி இக்பால். இவருக்கு அப்சல், ஜாவித், அலிஷான் என்ற 3 மகன்கள் உள்ளனர்.

இதனிடையே, தனது உறவுக்கார பெண்ணுக்கு மிசாபூர் பகுதியில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் சீட் பெற்றுத்தரும்படி டெல்லியை சேர்ந்த பெண் ஷாபின் என்ற நபர் மூலம் முன்னாள் எம்.எல்.ஏ. ஹாஜி இக்பாலை அனுகியுள்ளார்.

இதனை தொடந்து, பல்கலைகழகத்தில் சீட் பெற்றுத்தருவதாக கூறி அந்த பெண்ணையும் அவரது உறவுக்கார பெண்ணையும் மிசாபூருக்கு அழைத்துள்ளனர். இதை நம்பிய அந்த 2 பேரும் ஷாபினுடன் சேர்ந்து மிசாபூருக்கு சென்றுள்ளனர்.

அங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஹாஜி இக்பாலின் மகன்கள் அப்சல், ஜாவித், அலிஷான் 3 பேரும் ஷாபினுடன் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். உறவுக்கார பெண்ணை கூடுதல் ஆவணங்களை கொண்டுவருமாறு கூறியதால் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். அப்போது, அந்த பெண் மட்டுமே இருந்ததால் ஷாபினுடன் சேர்ந்து எம்.எல்.ஏ. மகன்கள் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த மார்ச் மாதம் நடந்துள்ளது. இது குறித்து நேற்று பாதிக்கபப்ட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக மற்றொரு வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. ஹாஜி இக்பால், மகன்கள் அப்சல், ஜாவித், அலிஷான் மற்றும் இக்பாலின் சகோதரன் முகமது மீது கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஹாஜி இக்பால் தலைமறைவாக உள்ள நிலையில் எஞ்சிய 4 பேரும் கைது செய்யபப்ட்டு சிறையில் உள்ளனர். தலைமறைவாக உள்ள ஹாஜி இக்பாலை போலீசார் தேடி வருகின்றனர்.

தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணும் புகார் அளித்துள்ள நிலையில் இந்த வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. மகன்கள் அப்சல், ஜாவித், அலிஷான் சிறையில் உள்ள நிலையில் வழக்கில் தொடர்புடைய ஷாபினை போலீசார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story