மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 4 வாலிபா்கள் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 4 வாலிபா்கள் பலி
x
தினத்தந்தி 21 May 2022 10:54 PM GMT (Updated: 22 May 2022 9:29 AM GMT)

மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 4 வாலிபா்கள் பலியானார்கள்.

பெங்களூரு: துமகூரு மாவட்டம் துருவகெரே மாயசந்திரா அருகே ஷெட்டி கொண்டனஹள்ளி ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அதே சாலையில் மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் 2 மோட்டார் சைக்கிள்களிலும் இருந்த 5 பேர் தூக்கி வீசப்பட்டனர். இதில், தலையில் பலத்தகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே 4 வாலிபர்கள் பரிதாபமாக இறந்து விட்டார்கள். ஒரு வாலிபர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.


தகவல் அறிந்ததும் துருவகெரே போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடியவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோாியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் பலியானவர்கள் பெயர் சசி, ரங்கநாத், பூதேஷ், மஞ்சுநாத் என்று தெரியவந்தது. படுகாயம் அடைந்தவரின் பெயர் நவீன் என்பதாகும். மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி வந்ததே விபத்திற்கு காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து துருவகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story