ஆண்மை சக்தி அதிகரிக்கும்..? ஆந்திராவில் 400 கிலோ கழுதை கறி பறிமுதல் - 11 பேர் கைது


ஆண்மை சக்தி அதிகரிக்கும்..? ஆந்திராவில் 400 கிலோ கழுதை கறி பறிமுதல் - 11 பேர் கைது
x

ஆந்திரா:

ஆந்திரா, லுங்கானா மாநிலங்களில் கழுதை கறி விரும்பி சாப்பிடப்படுகிறது. இதற்கு அரசு கடை விதித்த போதிலும் சட்ட விரோதமாக கழுதைகளை கடத்தி வந்து கறி விற்பனை செய்து வருகின்றனர். கழுதை கறி மூலம் வேகம், வலிமை, மற்றும் சுவாச பிரச்சனைகளை குணப்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள். குறிப்பாக ஆண்மை சக்தியை அதிகரிக்கும் என கூறுகின்றனர். இதனால் கழுதை வெட்டப்படும் இடங்களில் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ கறி ரூ.700 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து கழுதைகள் சட்டவிரோதமாக கடத்தப்படுகின்றன.

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் சட்டவிரோதமாக கழுதை கடைகள் நடத்தப்படுவதாக விலங்கின ஆர்வலர்களுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அளித்த புகாரின் பேரில் பாபட்லா மாவட்டத்தில் நேற்று 4 இடங்களில் சோதனை நடத்தினர். அங்கு கழுதைகளை வெட்டி சுகாதாரமற்ற முறையில் கறிகளை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

விற்பனை செய்து கொண்டிருந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். 400 கிலோ கழுதை இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

உசிலிப்பேட்டையில் இரண்டு இடங்களிலும், வேடபாலத்தில் ஒரு இடத்திலும், சிராலா ஒரு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

கைதானவர்கள் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கழுதைகளை வெட்டி அறுப்பது சட்டத்தை மீறுவதாகும், மேலும் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். உணவுப் பாதுகாப்புச் சட்டபடி கழுதை இறைச்சி சாப்பிடுவதும் சட்டவிரோதமானது. பொதுமக்கள் கழுதை இறைச்சிகளை வாங்கி சாப்பிட வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story