4,119 வழக்குகள் பதிவு இதுவரை ரூ.57.72 கோடி பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் மாநில தேர்தல் ஆணையம் தகவல்


4,119 வழக்குகள் பதிவு இதுவரை ரூ.57.72 கோடி பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் மாநில தேர்தல் ஆணையம் தகவல்
x
தினத்தந்தி 29 March 2023 11:11 PM GMT (Updated: 30 March 2023 4:50 AM GMT)

மொத்தமாக இதுவரை ரூ.57 கோடியே 72 லட்சத்து 35 ஆயிரத்து 315 ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

போதைப்பொருள்

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் சட்டவிரோதமாக பண கொண்டு சென்றது, பரிசு பொருட்களை பதுக்கியது குறித்து அதிகாரிகள் குழு சோதனை நடத்தியது. போலீசார் நடத்திய சோதனையில் ரூ.34 கோடியே 36 லட்சத்து 39 ஆயிரத்து 451 ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ.14 கோடியே 24 லட்சத்து 47 ஆயிரத்து 841 ரொக்கம் ஆகும்.

கலால்துறை இதுவரையில் ரூ.10 கோடியே 89 லட்சத்து 31 ஆயிரத்து 676 மதிப்புள்ள மதுபான வகைகளை பறிமுதல் செய்துள்ளது. இதில் 43 கிலோ போதைப்பொருள் அடங்கும். வருமான வரித்துறை ரூ.1 கோடியே 16 லட்சத்து 85 ஆயிரத்து 150 ரொக்கம் பறிமுதல் செய்துள்ளது. வணிக வரித்துறை ரூ.5.02 கோடியை பறிமுதல் செய்துள்ளது.

பரிசு பொருட்கள்

மொத்தமாக இதுவரை ரூ.57 கோடியே 72 லட்சத்து 35 ஆயிரத்து 315 ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடா்பாக இதுவரை 4 ஆயிரத்து 119 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு வேட்பாளர் ரூ.40 லட்சம் வரை செலவு செய்யலாம். வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிக்க 234 உதவி செலவு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.Next Story