உத்தரபிரதேசத்தில் லாரி மோதி 6 பேர் பலி


உத்தரபிரதேசத்தில் லாரி மோதி 6 பேர் பலி
x

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள சிட்டி கோட்வாலி பகுதியில் பொதுமக்கள் கூட்டத்துக்குள் லாரி புகுந்ததில் 6 பேர் பலியானார்கள்.

லக்கிம்பூர் கேரி,

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள சிட்டி கோட்வாலி பகுதியில் பொதுமக்கள் கூட்டத்துக்குள் லாரி புகுந்ததில் 6 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயம் அடைந்தனர்.

சம்பவ இடத்தில் சைக்கிள் மீது கார் மோதி சிறுவிபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு கூடிய மக்கள் மீது தான் லாரி மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 5 பேரும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இல்லாமல் ஒருவரும் பலியானார்கள்.

தகவல் தெரிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


Next Story