மேற்கு வங்க சட்டவிரோத பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து; 5 பேர் பலி
படுகாயமடைந்த பலர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளம் மாநிலத்தின் துத்தாபுகூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இருந்த பட்டாசு ஆலையில் இன்று தீப்பற்றியது. இதனால் பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த தீவிபத்தினால் பட்டாசு ஆலை முழுவதும் இடிந்து தரைமட்டமாகியது.
காலை 10 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர். படுகாயமடைந்த பலர் பராசத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
தற்போது மீட்புப்படையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story