திருட்டு வழக்குகளில் தம்பதி உள்பட 5 பேர் கைது


திருட்டு வழக்குகளில் தம்பதி உள்பட 5 பேர் கைது
x

பெங்களூருவில் திருட்டு வழக்குகளில் தம்பதி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூரு சம்பிகேஹள்ளி போலீசாருக்கு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், அவர்கள் ஜான் பிரவீன் (வயது 32), இவரது மனைவி ஆனந்தி (21). மாமியார் தனலட்சுமி, பவர்லால் (48), சேத்தன் சவுத்திரி (29) என்று தெரிந்தது. இவர்களில் ஜான் பிரவீன் தான் நகரில் பூட்டி கிடக்கும் வீடுகளின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி வந்துள்ளார்.

ஜான் பிரவீன் திருடி வரும் நகைகளை எடுத்து சென்று ஆனந்தியும், அவரது தாய் தனலட்சுமியும் விற்பனை செய்து வந்துள்ளனர். அது திருட்டு நகைகள் என்று தெரிந்தும் கூட, அவற்றை குறைந்த விலை கொடுத்து பவர்லால், சேத்தன் சவுத்திரி வாங்கி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.17½ லட்சம் நகைகள் மீட்கப்பட்டது.


Next Story