பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு போதும்; தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி பேட்டி


பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு போதும்; தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி பேட்டி
x

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு போதும் என்று தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வீரசைவ-லிங்காயத், ஒக்கலிகர் ஆகிய சமூகங்களுக்கு தனி இட ஒதுக்கீட்டு பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. வீரசைவ-லிங்காயத் சமூகத்தில் பஞ்சமசாலி பிரிவும் அடங்கும். அனைத்து பிரிவுகளுக்கும் சேர்த்து இட ஒதுக்கீடு முடிவு செய்யப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

ஆனால் கர்நாடகத்தில் அந்த பிரிவினருக்கு அதிகபட்சமாக 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினால் போதுமானது. அவற்றில் மீதமுள்ள 5 சதவீதம் வீரசைவ-லிங்காயத் மற்றும் ஒக்கலிகர் சமூகங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். எந்தெந்த சமூகங்களுக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது குறித்து வருகிற மார்ச் மாதத்திற்குள் அறிவிக்கப்படும். இட ஒதுக்கீட்டு விஷயத்தில் கர்நாடக அரசின் முடிவை காங்கிரஸ் விமர்சிக்கிறது. முன்பு அவர்கள் ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தனர்?. லிங்காயத்-ஒக்கலிகர் சமூகங்களுக்கு அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முருகேஷ் நிரானி கூறினார்.


Next Story