சூதாட்ட சோதனையில் அலட்சியம்: உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 போலீசார் பணி இடைநீக்கம்


சூதாட்ட சோதனையில் அலட்சியம்: உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 போலீசார் பணி இடைநீக்கம்
x

சூதாட்ட சோதனையில் அலட்சியமாக இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சதாசிவநகர் போலீஸ் நிலைய 2 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட போலீஸ்காரர்கள் 5 பேர் தலைமையில் அந்த பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் முறையாக அந்த இடத்தில் சோதனை செய்யவில்லை என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் சீனிவாஸ் கவுடாவுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக 2 உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பேரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், அவர்கள் மீது துறைரீதியான விசாரணை நடத்தவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story