இமாசலபிரதேசத்தில் கார் மோதி 5 தொழிலாளர்கள் பலி..!


இமாசலபிரதேசத்தில் கார் மோதி 5 தொழிலாளர்கள் பலி..!
x

இமாசலபிரதேசத்தில் கார் மோதி 5 தொழிலாளர்கள் பலியாகியினர்.

சிம்லா,

இமாசலபிரதேச மாநிலம் சோலன் மாவட்டம், சிம்லா சண்டிகார் நெடுஞ்சாலையில் நேற்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.

தரம்பூர் என்ற இடத்தில் வந்தபோது அந்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக வேலைக்காக நடந்து சென்று கொண்டிருந்த கூலித் தொழிலாளர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது.

இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

1 More update

Next Story