Normal
கேரளாவில் ஜூன் 9-ந் தேதி முதல் 52 நாட்கள் மீன் பிடிக்க தடை
கேரளாவில் விசைப்படகு மீனவர்கள் ஜூன் 9-ந்தேதி நள்ளிரவு முதல் ஜூலை 31-ந்தேதி வரை 52 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்,
மீன் குஞ்சுகளின் வளர்ச்சி மற்றும் தீவிர மழைக்காலத்தில் மீனவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் விசைப்பட்டு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிக்க கேரள அரசு தடை விதித்து வருகிறது.
இந்த நிலையில் கேரள மீன் வளத்துறை மந்திரி சஜி செரியான் தலைமையில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் மீனவ பிரதிநிதிகள், மீனவர்களில் பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு பின் மந்திரி சஜி செரியான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேரளாவில் வருகிற ஜூன் 9-ந் தேதி முதல் ஜூலை 31- ந் தேதி வரை மீன்பிடி தடைகாலம் அமலில் இருக்கும். இக்கால அளவில் மீனவ குடும்பங்களுக்கான இலவச ரேசன் உட்பட சலுகைகள் வழக்கப்போல் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story