14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 52 வயது டியூசன் ஆசிரியர் - அதிர்ச்சி சம்பவம்
வகுப்பறையில் இருந்து மாணவ-மாணவிகள் சென்ற பின்னர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் அஜின் பகுதியில் 52 வயது நபர் டியூசன் ஆசிரியர் அப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார்.
கடந்த 11-ம் தேதி டியூசன் வந்த 14 வயது சிறுமிக்கு அந்த நபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி யாரிடமும் கூறாமலும் டியூசனுக்கு செல்வதையும் நிறுத்திவிட்டார்.
டியூசனுக்கு செல்லாமல் நின்றது குறித்து சிறுமியிடன் அவரின் தாயார் கேட்டுள்ளார். அப்போது, டியூசன் ஆசிரியர் தனக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்தது குறித்து சிறுமி அவரது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், டியூசன் ஆசிரியர் குறித்து நேற்று போலீசில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டியூசன் ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.