நல்ல நிர்வாக வாரம்: 53 லட்சம் பொதுமக்கள் குறைகளுக்கு தீர்வு


நல்ல நிர்வாக வாரம்: 53 லட்சம் பொதுமக்கள் குறைகளுக்கு தீர்வு
x

நல்ல நிர்வாக வாரத்தில் 53 லட்சம் பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும், 'சுஷாசன் சப்தா' எனப்படும் 'நல்ல நிர்வாக வாரம்' கடைப்பிடிக்கப்படுகிறது.

இதில் பொதுமக்கள் குறைதீர்ப்பு, அரசு சேவைகள் மேம்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. அதன்படி, 2-வது நல்ல நிர்வாக வாரம் கடந்த 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டது.

'கிராமத்தை நோக்கி நிர்வாகம்' என்ற கருப்பொருளில் கடைபிடிக்கப்பட்ட இந்த வாரத்தில், 53.8 லட்சம் பொதுமக்கள் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டன. அரசு சேவை தொடர்பான 3 கோடியே 10 லட்சம் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மத்திய பணியாளர் நலத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story