ஜம்மு-காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு - டெல்லியிலும் நில அதிர்வு


ஜம்மு-காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு - டெல்லியிலும் நில அதிர்வு
x
தினத்தந்தி 13 Jun 2023 3:10 PM IST (Updated: 13 Jun 2023 3:13 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லியில் உணரப்பட்டது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் தொடா பகுதியை மையமாக கொண்டு இன்று மதியம் 1.33 மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கம் தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டது. அதேபோல் வடமாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் நாட்டின் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உணரப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீரை மையமாக கொண்டு இன்று மதியம் 1.04 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். லாகூர், இஸ்லாமாபாத், பெஷாவர் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜம்மு-காஷ்மீரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


Next Story