ஜம்மு - காஷ்மீரில் 5 ஜி சேவை துவக்கம்...!


ஜம்மு - காஷ்மீரில் 5 ஜி சேவை துவக்கம்...!
x

ஜம்மு -காஷ்மீரில் 5 ஜி சேவையை துணை நிலை கவர்னர் இன்று துவக்கி வைத்தார்.

ஜம்மு,

இன்றைய நவீன உலகில் இணையத்தின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. உலகத்தையே நமது உள்ளங்கைக்குள் கொண்டு வந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். தற்போது புழக்கத்தில் உள்ள 4ஜி சேவையைவிட பல மடங்கு வேகத்தை வழங்கும் 5 ஜி சேவையை இந்தியாவில் பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கி வைத்தார்.

இந்தநிலையில், பல்வேறு பெருநகரங்களில் 5-ஜி சேவையை ஜியோ, ஏர்டெல் அகிய தொலை தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஜம்மு-காஷ்மீரில் ஜியோ 5ஜிசேவையை துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கவர்னர் மாளிகையில் துவக்கி வைத்தார்.

இதன் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு பல்வேறு பயன்பாட்டிற்கு அதிவிரைவு இணைய சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story