5ஜி சேவை இன்று தொடக்கம் - பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
5ஜி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
புதுடெல்லி,
சமீபத்தில், 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது. ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா, அதானி நிறுவனம் ஆகியவை ஏலம் எடுத்தன. மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்புள்ள அலைக்கற்றைகள் ஏலம் போனது.
இந்தநிலையில், நாட்டில் 5ஜி சேவை இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. டெல்லி பிரகதி மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
முதலில், குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வருகிறது. 2 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.
4ஜி சேவையை விட பல மடங்கு வேகத்தில் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய 5ஜி சேவை உதவும். அதே நிகழ்ச்சியில், இந்திய மொபைல் காங்கிரசின் 4 நாள் மாநாட்டையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
Related Tags :
Next Story