ரூ.1.50 லட்சம் கோடியை கடந்த 5ஜி அலைக்கற்றை விற்பனை..!! - 7-வது நாளாக இன்றும் ஏலம்


ரூ.1.50 லட்சம் கோடியை கடந்த 5ஜி அலைக்கற்றை விற்பனை..!!  - 7-வது நாளாக இன்றும் ஏலம்
x

5ஜி அலைக்கற்றை விற்பனை ரூ.1.50 லட்சம் கோடியை கடந்துள்ளது. தொடர்ந்து 7-வது நாளாக இன்றும் ஏலம் நடைபெறுகிறது.

புதுடெல்லி,

அதிவேக இணையதள வசதியை கொடுக்கும் 5ஜி அலைக்கற்றை விற்பனைக்கான ஏலம் கடந்த 26-ந் தேதி முதல் நடந்து வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன்-ஐடியா மற்றும் அதானி குழுமம் என 4 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கெடுத்து தொடர்ந்து அலைக்கற்றையை சொந்தமாக்கி வருகின்றன.

இதில் 6-வது நாளாக நேற்றும் 7 சுற்று ஏலம் நடந்தது. இதில் ரூ.163 கோடிக்கு அலைவரிசை ஏலம் போனது. இதன் மூலம் கடந்த 6 நாட்களாக நடந்த 5ஜி ஏலத்தில் ரூ.1,50,130 கோடிக்கு அலைக்கற்றை விற்பனை நடந்து உள்ளது.

இந்த ஏலம் 7-வது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) நீடிக்கிறது. உத்தரபிரதேசத்தின் கிழக்கு வட்டத்தில் ரேடியோ அலைகளுக்கான தேவை அதிகரித்ததை தொடர்ந்து அலைக்கற்றை ஏலம் 7-வது நாளுக்கு தள்ளிப்போயிருப்பதாக தொலைத்தொடர்பு வட்டார அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story