ஒடிசாவில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி


ஒடிசாவில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி
x

ஒடிசாவில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

புவனேஸ்வர்,

ஒடிசாவின் கஞ்சம்-கந்தமால் மாவட்டங்களின் எல்லையான கலிங்க காட் பகுதியில் மேற்கு வங்கத்தில் இருந்து வந்த சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர், மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சுமார் 76 பயணிகளுடன் கந்தமால் மாவட்டத்தில் உள்ள டேரிங்பாடிக்கு சென்றுவிட்டு விசாகப்பட்டினம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பிரேக் செயலிழந்ததால் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு பெர்ஹாம்பூரில் உள்ள எம்.கே.சி.ஜி. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


Next Story