ராஜஸ்தானில் ஜீப் மீது லாரி கவிழ்ந்ததில் 6 பேர் பலி, பலர் காயம்


ராஜஸ்தானில் ஜீப் மீது லாரி கவிழ்ந்ததில் 6 பேர் பலி, பலர் காயம்
x

ராஜஸ்தானில் ஜீப் மீது லாரி கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

தௌசா,

ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் ஜீப் மீது டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 12 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

மந்தாவர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மஹ்வா-மண்டவார் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது என்றும், டிரக்கில் குளிர்பானம் ஏற்றப்பட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மஹ்வா மற்றும் மாண்டவார் காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீசார், சம்பவ இடத்துக்குச் சென்று உள்ளூர் மக்களுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டதுடன், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story