கூரியர் அலுவலகத்தில் ரூ.6 லட்சம் நகை திருட்டு


கூரியர் அலுவலகத்தில் ரூ.6 லட்சம் நகை திருட்டு
x

பெங்களூருவில் கூரியர் அலுவலகத்தில் ரூ.6 லட்சம் நகை திருட்டு போய் உள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு அல்சூர்கேட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நகரத்பேட்டை பகுதியில் ஒரு கூரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த கூரியர் நிறுவனத்திற்கு வந்த மர்மநபர் ஒருவர் தனக்கு காது கேட்காது என்று கூறியுள்ளார். மேலும் உணவு சாப்பிட பணம் தரும்படி கூரியர் நிறுவன உரிமையாளர் கபில்குமாரிடம் கேட்டு உள்ளார். இதனால் அந்த நபருக்கு கபில்குமார் ரூ.20 கொடுத்து அனுப்பி உள்ளார். அப்போது அந்த மர்மநபர் கூரியர் நிறுவனத்தில் இருந்து ஒரு பார்சலை திருடி சென்றார்.

அந்த பார்சலில் ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகள் இருந்து உள்ளது. பார்சல் திருடப்பட்டது தெரிந்ததும் கபில்குமார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது மர்மநபர் அந்த பார்சலை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் அல்சூர்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடிவருகின்றனர்.

1 More update

Next Story