மேற்கு வங்காளத்தில் சரக்கு ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து


மேற்கு வங்காளத்தில் சரக்கு ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
x

சரக்கு ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்ட சம்பவம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரியில் இருந்து நியூ ஜல்பைகுரி ரெயில் நிலையத்திற்கு சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரெயிலானது இன்று காலை 6.20 மணியளவில் நியூ மைனகுரி ரெயில் நிலையத்தில் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தால் ரெயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டதால் ரெயில் சேவை பெரிதாக பாதிக்கப்படவில்லை என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அலிபுர்துவார் கோட்ட ரெயில்வே மேலாளர் உள்ளிட்ட ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

அலிபுர்துவார் கோட்ட ரெயில்வே மேலாளர் அமர்ஜித் கவுதம் கூறுகையில், நியூ மைனகுரி ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. போக்குவரத்தை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.

1 More update

Next Story