காரில் கடத்திய 60½ கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது


காரில் கடத்திய 60½ கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது
x

ஆந்திராவில் இருந்து உப்பள்ளிக்கு காரில் 60½ கிலோ கஞ்சாவை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

உப்பள்ளி;


உப்பள்ளி குசுகல்லா ரோடு ஆகஸ்போர்டு பல்கலைக்கழகம் அருகே உப்பள்ளி குற்றப்பிரிவு போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.

காாில் இருந்த 2 பேர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், காரில் சோதனை செய்தனர். அப்போது காரில் மூட்டை, மூட்டையாக கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.

இதுகுறித்து அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் ஆந்திராவை சேர்ந்த ரவிக்குமார், ஜலபத் ராவ் என்பதும், ஆந்திராவில் இருந்து உப்பள்ளிக்கு விற்பனைக்காக கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 60½ கிலோ கஞ்சா, ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story