டெல்லியில் மேலும் 678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


டெல்லியில் மேலும் 678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x

Image Courtesy : PTI 

டெல்லியில் இன்று 678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று 678 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 19,36,365 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,266 ஆக உள்ளது. அதே சமயம் டெல்லியில் இன்று 969 பேர் கொரோனா சிகிச்சையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் டெல்லியில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,06,689 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது 3,410 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

1 More update

Next Story