பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.7 கோடி கொகைன் பறிமுதல்


பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.7 கோடி கொகைன் பறிமுதல்
x

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.7 கோடி கொகைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கென்யா பெண் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு:-

கொகைன் கடத்தல்

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதனை பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து தங்கம், வெளிநாட்டு பணம், போதைப்பொருட்கள் ஆகியவற்றை கடத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.

அதுகுறித்த ரகசிய தகவல்களின்பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்களையும் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூருவில் விமான நிலையத்தில் கொகைன் கடத்தல் நடப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் அதிகாரிகள் விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து விமானம் ஒன்று வந்தது.

பெண் கைது

அதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பெண் பயணி ஒருவர் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணை தனி

அறைக்கு அழைத்து சென்று அவரை சோதனை செய்தனர். அப்போது அவர் தனது வயிற்றின் குடலில் மறைத்து வைத்து 'அயன்' படப்பாணியில் கொகைன் கடத்தியது தெரிந்தது. இதையடுத்து அவரை மருத்து பரிசோதனைக்கு உட்படுத்தி, 650 கிராம் கொகைனை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் கடத்தல் தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் கைதான பெண் கென்யாவை சேர்ந்த சியேரா லிஒன் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர் கடத்தி வந்த கொகைனின் மதிப்பு ரூ.7 கோடி ஆகும். மேலும், அவர் இதுபோல் பலமுறை கொகைன் கடத்தி வந்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story