சத்தீஸ்கர்: சுண்ணாம்பு சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து - 7 பேர் பலி


சத்தீஸ்கர்: சுண்ணாம்பு சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து - 7 பேர் பலி
x

சத்தீஸ்கரில் சுண்ணாம்பு சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராய்பூர்,

சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரி அருகே மல்கான் கிராமத்தில் சுண்ணாம்பு சுரங்கம் தோண்டும் பணியின் போது மண் சரிந்தது. இதில் அங்கு வேலை பார்த்து கொண்டு இருந்த 12 தொழிலாளர்கள் மண்ணிற்குள் புதைந்தனர். இந்த மண் சரிவில் சிக்கி பெண்கள் உள்பட 7 தொழிலாளர்கள் பலியானார்கள்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் 7 பேரின் உடலை மீட்டனர். மேலும் மண்சரிவில் சிக்கி உள்ள 5 பேரை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story