அரியானாவில் பஸ் மீது லாரி மோதி பயங்கர விபத்து - 7 பேர் உயிரிழப்பு, 4 பேர் காயம்
அரியானா மாநிலம் அம்பாலாவில் பஸ் மீது டிரக் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அம்பாலா,
அரியானா மாநிலம் அம்பாலாவில் பஸ் மீது டிரக் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யமுனா நகர்-பஞ்ச்குலா நெடுஞ்சாலையில் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது. லோடு ஏற்றிச் சென்ற லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த பஸ் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. பின்னர் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடந்தனர்.
இதையடுத்து காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் இரு வாகனங்களின் டிரைவர்களும் உயிர் தப்பினர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story